ஆதிசக்தி (Aathisakthi)

 

அகிலமெங்கும் வீற்றிருந்து, அழைத்தோர்க்கு விரைந்து வந்து, கையிலொரு சூலமும், ஒரு கண்ணில் வீரமும் மறுக்கண்ணில் தாய்மையும் ஏந்திய அந்தச் சக்தி ஸ்வரூபத்தைத் தான் மானிடன் பராசக்தியெனவும் ஆதிசக்தியெனவும் அம்பாள் எனவும் ஊணுருக உயிருருக அழைக்கிறான்.எண்ணிலடங்கா வடிவங்களை அவள் எடுத்திருந்தாலும் அதன் சக்தி மூலம் என்னவோ என்றுமே ஒன்றாகத்தான் இருக்கிறது. கிராமப்புற எல்லைகளிலே ஊர் நலத்தைக் காக்கவும் மங்கையரின் புனிதத்தை நிலைநாட்டவும் மாரியம்மன்,காளிதேவி மற்றும் பேச்சியம்மன் போன்ற அவதாரங்களை எடுத்து செல்வத்தை அள்ளித் தரும் அஷ்டலக்ஷ்மியாகவும் வெள்ளை தாமரையில் பூத்து ஞானம் தரும் கலைவாணியாகவும் வீரமங்கையாய் நரர்களையும் சுரர்களையும் பொறுத்தாளும் ஸ்வருப்பமாகவும் நாம் தொழுகின்ற ஜகன்மாதா அருள் புரிகிறாள். பெற்றெடுத்தத் தாய் எப்படித் தன் குழந்தையைக் கருவிழியாய் காப்பாளோ, துயரத்தில் வாடுகையில் புகலிடம் கொடுப்பாளோ, தன் சேயை அழிக்க வருவோரை எப்படி வதைப்பாளோ அதே அங்கத்தைத் தான் தேவி பராசக்தியும் வகிக்கிறாள். நமது இதயம் வடிக்கும் கண்ணீர் துளிகள் அவள் பொற்பாதம் தன்னைத் தீண்டினால் உடனே கலங்கரை விளக்கமாய் வருபவளும் அவளே. மனமுருக துதிப்பாடி, அவளை உள்ளத்தின் இடுக்கெங்கும் நிரப்பி, வேண்டுகின்ற வரங்களைக் கேட்டால் கொடுக்காமளா இருப்பாள் அந்த அகிலாண்டப்பரமேஸ்வரி?நம்புங்கள்!அவள் உங்கள் தாய்!சுக்குநூறாய் உடைகையிலும் அவள் நாமம் தன்னைச் சொல்லுங்கள்!தன்னைத் தாயென அழைத்து சரணாலயம் தேடி வருபவர்களை அவள் என்றும் காக்காது இருந்ததில்லை. 'ஓம் சக்தி' என்று சொன்னால் உங்கள் உயிரிலே உறைவாள். அவளருளை உளமார்ந்து தொழுந்து அனுபவியுங்கள். எல்லையில்லாத அந்த ஈரேழு புவனநாயகியை வணங்கி உங்கள் துயரங்களை எல்லாம் ஒப்படையுங்கள்,அவள் அதை ஏந்திக் கொள்வாள். விஸ்வரூபமெடுத்து வினையெல்லாம் தீர்க்கும் அந்த ஆதிசக்தியைப் பணிந்து வணங்கிய வண்ணம் விடைபெறுகிறேன். வணக்கம்.

அன்புடன்,
டெல்வின்ராஜ்.

5 Comments

  1. Sirapu Delvind memmeelum uyarga����

    ReplyDelete
  2. சிறப்பு

    ReplyDelete
  3. Wonderful explanation about the 7 புவனநாயகியை. Superb post

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post