இரகசியம் (Iragasiyam)

 


மெய்யியல்‌ என்று சொல்லும்போது அது ஒரு மிகப்பெரிய
மெய்ஞானத்தையும்‌ நமது இருப்புக்கும்‌ இந்தப்‌ பிரபஞ்சத்திற்கும்‌
இடையிலான தொடர்பையும்‌ பறைசாற்றுகிறது. நாம்‌ அறிந்து
வைத்திருக்கும்‌ அறிவியல்‌ கோட்பாடுகளையும்‌ விஞ்ஞான
விதிகளையும்‌ தாண்டி நம்முடைய எண்ண அலைகள்‌ நமது
வாழ்வியலில்‌ எது போன்ற சூட்சமங்களை எல்லாம்‌ உருவாக்க
முடியுமென்பதே மெய்யியல்‌.

அவ்வகையில்‌ நம்மில்‌ நாமே விதைத்து கொள்ளக்‌ கூடிய சில
உணர்வுகள்‌ நம்மைச்‌ சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்கி
நம்மைச்‌ சூழ்ந்து கொள்கின்றது. அந்தச்‌ சக்தி வளையமானது
நேர்மறையானதாகவும்‌ இருக்கலாம்‌ எதுர்மறையானதாகவும்‌
இருக்கலாம்‌. பிரபஞ்சம்‌ அல்லது அண்டமென்பதை தத்துவ ரீதியாக
பார்க்கும்போது அது ஒரு சக்தி கிடங்காகவும்‌ நமது எண்ண அலைகள்‌
குவிந்து கிடக்கும்‌ ஒரு குவியலாகவும்‌ காணப்படுகிறது. இந்த
அடிப்படை தத்துவத்தை நீங்கள்‌ பல இடங்களில்‌ கேட்டிருக்கலாம்‌.
ஆனால்‌, அது எத்தனை மனிதர்களால்‌ செயல்படுத்தபடுகிறது
என்பதே அதன்‌ வீரியத்தைக்‌ குறிக்கும்‌.

நீங்கள்‌ எதையெல்லாம்‌ உங்கள்‌ வசமாக்‌கிக்‌ கொள்ள வேண்டுமென்று
நினைக்கிறீர்களோ அதை அடைவது போலவும்‌ அவற்றை அடைந்து
விட்டதாகவும்‌ தியானித்தலே பிரபஞ்ச நியதி. நீங்கள்‌ எத்துணை
ஆழமாக உங்களின்‌ சாதனையைக்‌ கற்பனை செய்கிறீர்களோ அந்த
அளவிற்கு அதனுடைய வீரியம்‌ இருக்கும்‌.எப்பொழுது நீங்கள்‌
தினமும்‌ ஒரு 10-15 நிமிடங்களுக்குக்‌ கண்களை மூடி அமைதியான
நிலையில்‌ அமர்ந்து உங்களின்‌ மனத்திரையில்‌ நீங்களே உங்கள்‌
வெற்றியைக்‌ காட்சிப்படுத்திக் கொள்கிறீர்களோ அப்பொழுது தான்‌
உங்களுடைய எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே உங்களால்‌
நிரல்படுத்த முடியும்‌. தங்களின்‌ வேட்கை அலைகள்‌
அண்டப்பெருவெளியிலே ஒரு பிரமாண்டமான குவியலாக
உங்களிடமே மீண்டும்‌ பாய்ந்து வர காலங்கள்‌ ஆகலாம்‌. அதுவரையில் உங்களையும்‌
தங்களது நேர்மறை எண்ணங்களையும்‌ விடாமுயற்சியையும்‌ உங்கள்‌
உயிரிலே கட்டி வையுங்கள்‌; அது ஒரு நாள்‌ கொடிக்கட்டிப்‌ பறக்கும்‌.

அன்புடன்,
டெல்வின்ராஜ்.

4 Comments

  1. Wonderful article about the universe and how to achieve our goals��

    ReplyDelete
  2. You have a very good writing skills, Delvind

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post