பொய்கள்: நேர்கோடு (Poigal:Nerkodu)


.

நன்னெஞ்சங்களே, வணக்கம். வழக்கமாக தத்துவ தண்டவாளத்திலேயே பயணித்து கொண்டிருகடலோரம் கவிப்பாடும் கலைஞன் நான் இல்லை இருந்தாலும், எனக்கு ஆதரவு தர வந்த க்கும் எனது எழுத்து இரயில் இன்று சற்று விஞ்ஞான பாதையிலே விடியலைத் தேடி விரைகிறது. இன்றைய தலைப்பையே ‘பொய்கள்’ என நான் பெயரிட்டதன் காரணம் வேறேதும் இல்லை, நம்மைச் சுற்றி இருக்கும் விஞ்ஞானத்தை விலாசி உங்கள் வினாக்களுக்கு ஒரு விலாசம் அளிக்கவே.காலம். முப்பது கோடியாய் மக்கள் தொகை உயர்ந்தாலும் இந்த மூன்றெழுத்து சொல் மட்டும் நமது வாழ்வியலில் பல சூட்சமங்களை விதைக்க தவறுவதில்லை.

மனித வாழ்க்கையின் நான்காம் கோணமாய் பரிமளித்து பரம்பொருளையே பல நேரங்களில் ஆள்கிறது இந்த் அற்புதத்தின் அற்புதம். இயற்பியலின் (physics) வரலாற்று பக்கங்களில் நீக்க முடியாத ஒரு பெருந்தகை, ஐன்ஸ்டீன். அவரின் சிந்தனை நதியிலே மிதந்தோடிய ஒரு ஞான துகள் தான் “காலம் ஒரு பொய்” என்ற அறிவியல் கூற்று.பொய்யென்பதைத் தாண்டி இதை மாயை அல்லது நம்மையே ஆட்பறிக்கும் மாயவலை என்று கூட சொல்லலாம். கடிகார முட்களுக்குள்ளே சுழற்றியடிக்கப்படுவதில்லை காலம். இறந்தவையும், நிகழ்பவையும், நடக்க இருப்பதும் அல்ல இதன் சாரம்சங்கள்.மாறாக, நமது வாழ்கையையே பகடைக்காயாக்கி பொம்மலாட்டம் ஆடும் மிகப்பெரிய தந்திரம் இது. இந்த உண்மையைப் பறைசாற்றும் விதமாக நமது அன்றாட வாழ்க்கையில் ஓர் உதாரணம் உதயமாகிறது. சாமானிய மனிதன் தனக்குப் பிடித்த வேலைகளையோ அல்லது தனக்கு நாட்டம் அதிகமாக இருக்கும் பணிகளில் தன்னை ஆழ்த்திக் கொள்ளும்போது காலம் கடப்பதையே அறியாத ஒரு நிலை ஏற்படுகிறது. இதுவே நமக்குப் பிடிக்காத இடங்களில் நாம் இருக்கும்போதும் விருப்பமில்லாத வேலைகளைச் செய்யும்போதும் நேரம் மிகவும் மெதுவாக நகர்வதைப் போன்ற மனநிலை உண்டாகிறது. ஆனால், உண்மையிலேயே இவை இரண்டிற்குமான கால இடைவெளியும்/அளவும் ஒன்றாக தான் இருக்கிறது. ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை விளக்க இது ஓர் எளிதான சான்று.

சினிமாவில் சித்தரிக்கப்படுவதைப் போல் அல்லாமல் காலப்பயணம் எனப்படுவது முற்றிலும் மாறுப்பட்ட ஒரு செயல்முறையாக திகழ்கிறது.இன்னும் நம்மைத் திடுக்கிட செய்யும் தகவலானது, நமக்குள் முடிந்ததாக காட்சிப்படுத்தப்படும் இறந்த காலமும் நிஜமென்று நாம் நம்பும் நிகழ்காலமும் இவ்வளவு ஏன் நமது காத்திருப்புகளின் விடையாய் விளங்கும் எதிர்காலமும் ஒரே நேரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் கடந்து வந்ததையும் கடந்து சென்று கொண்டிருப்பதையும் கடந்து போக போவதையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து சிந்தித்து பாருங்கள் ; அவை மூன்றுமே ஒரே நேரத்தில் தான் தனக்கான அங்கங்களை வகித்து கொண்டிருக்கும். முக்கியமாக, நாம் வேறுபடுத்தி வைத்திருக்கும் இந்தக் கால வரையறைகள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கிறது. இன்று நிஜமாக இருப்பது நாளை இறந்ததாக தென்படும், நாளை வருவது நாளை நிஜமாக தெரியும். எல்லாமே ஒரு தொடர்சங்கிலியாய் நம் வாழ்கையைப் பிணைத்து வைத்திருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள், பதில் கிடைக்கும்.

காலச்சக்கரத்தைத் தன்வசப்படுத்தி தனது வாழ்க்கையை மறுசீரமைக்க விரும்புபவர்கள் முதலிலே காலப்பயணத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்ள வேணடும். நாம் நமது எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க ஓர் ஒளிக்கதிரின் வேகத்திற்கு ஈடாக விரவிச் செல்ல வேண்டும் என்பதை இங்கே முதலில் நான் பதிவிட விழைகிறேன். அண்டவெளியில் இருக்கும் புழுத்துளை (Wormhole) என்பது தான் இந்த இடயெல்லைக்கும் காலத்திற்கும் இடையிலான தொடர்பு சின்னம் என்கின்றன ஐன்ஸ்டீனின் கணிப்புகள். அண்டவெளியிலே எப்படிக் கருந்துளையின் (Blackhole) செயல்பாடு இருக்கிறதோ அது போலவே தான் புழுத்துளையும் இன்னும் தனக்குள்ளே பல ஆச்சரியங்களைத் தொகுத்து வைதிருக்கிறது. அதன் வழியே தான் நம்மால் நமது எதிர்காலத்தைச் சென்றடைய இயலும் என்பதைக் கோட்பாடு ரீதியாக நிரூபிக்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி ஓர் ஒளிக்கதிரின் வேகத்திற்கு ஈடாக மனிதர்கள் பயணிக்க வேண்டுமாயின் முதலில் ஓர் அணுவைக் காட்டிலும் நாம் சிறியதாக உருமாற வேண்டும். காரணம் எடை குறைய குறைய தான் பயணிக்கும் வேகம் அதிகரிக்கும். இத்துணைப் பெரியதொரு வல்லமை அதாவது தங்கள் விருப்பதிற்கு ஏற்றார் போல் உருமாறும் ஆற்றல் நமது பண்டைய சித்தர்களிடத்தில் இருந்தது என்பதைப் புராணங்களின் தொன்மையான பக்கங்கள் பதிக்கின்றன.

நிமிடத்தில் தொடங்கி நூற்றாண்டு வரை பயணிப்பதே காலம் என்று நினைத்து கொண்டிருந்த மானுடத்தை இந்தச் சூட்சம இரகசியங்கள் இன்றியமையாத ஓர் ஆச்சரியத்தில் மூழ்க செய்கிறது. நாம் வாழும் இந்தப் பூமியிலேயே கண்டறியப்பட வேண்டிய விடயங்கள் கோடி கணக்கில் இருக்கும்போது உருவில்லாத உண்மைகளை அறிய விரும்பும் மனங்களுக்கு இந்தப் பதிவு பரிசாக அமையட்டும். நான் படித்து ஆராய்ந்ததைப் பகிர்ந்தேன் இருப்பினும், மெய்ஞானத்தின் விஞ்ஞான கோட்பாடுகள் ஓய்வதில்லை! சந்திக்கலாம், நன்றி!

அன்புடன்,

டெல்வின்ராஜ்.




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post